ஒரே ஒரு ஆப் மூலம் ஆப்பு வைத்த மத்திய அரசு! ஆடிப்போன சீமான் உள்ளிட்ட தலைவர்கள்

சனி, 2 நவம்பர் 2019 (20:06 IST)
மத்திய அரசு ஒரே ஒரு ஆப் மூலம் இந்தியாவிற்கு எதிராக கருத்துக்களை தெரிவித்து வருபவர்களை கண்காணித்து வருவதால் இந்தியாவுக்கு எதிராக கருத்துக்களை தெரிவித்து வரும் சீமான், திருமுருகன் காந்தி உள்ளிட்ட பல அமைப்புகளின் தலைவர்கள் அதிர்ச்சியில் உள்ளதாக கூறப்படுகிறது
 
இஸ்ரேல் நிறுவனத்தின் புதிய கண்டுபிடிப்பான பெகாவஸ் ஸ்பைவேர் என்ற ஆப் ஒருவரின் மொபைல் போனில் நுழைந்து விட்டால் அந்த மொபைல் போனில் உள்ள அனைத்து தகவல்களையும் ஒரே நிமிடத்தில் எடுத்துவிடுமாம். அந்த மொபைல் போனில் உரிமையாளர் யார் யாரிடம் பேசினார், எவ்வளவு நேரம் பேசினார் என்னென்ன பேசினார் என்பது உட்பட அனைத்து தகவல்களையும் எடுத்து விடும் என்று கூறப்படுகிறது 
 
அந்த வகையில் இந்த செயலியை மத்திய அரசு இஸ்ரேலிடமிருந்து பெற்றுள்ளதாகவும் இதன் மூலம் இந்தியாவுக்கு எதிராக கருத்து கூறி வரும் அமைப்புகளின் தலைவர்கள் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் இதனை அடுத்து பல ஆதாரங்கள் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது 
 
இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் அவர்களின் ஆலோசனைப்படி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்த ஆப் மூலம் கிடைத்த தகவலின்படி தான் சமீபத்தில் தேசிய பாதுகாப்பு அமைப்பு தமிழகத்தில் சோதனை செய்து பல ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளை கைது செய்தது என்பது குறிப்பிடத்தக்கது 
 
தற்போது இந்த ஆப் மூலம் கிடைத்துள்ள ஆதாரத்தின் அடிப்படையில் இந்தியாவுக்கு எதிராக பேசிய அனைத்து பிரிவினைவாதிகள் மீது அதிரடியாக நடவடிக்கை எடுக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதால் சீமான் திருமுருகன் காந்தி உள்பட நாட்டுக்கு எதிராக பேசிவரும் அனைத்து தலைவர்களும் அச்சத்தில் இருப்பதாக கூறப்படுகிறது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்