கர்நாடக மாநிலம், உடுப்பி அருகே உள்ள குந்தாப்பூர் டான்பாஸ்கோ பள்ளிக்கான வேனில் ஆசிரியை பிலோமினா உள்ளிட்ட மாணவ, மாணவிகள் மொத்தம் 18 பேர் பயணம் செய்தனர்.
இந்த வேன், டிராசி பகுதியிலுள்ள மொகடி கிராஸ் என்ற பகுதியில் சென்றபோது, பைந்தூரிலிருந்து குந்தாப்பூருக்கு சென்ற தனியார் பஸ் நேருக்கு நேர் மோதியது.
இந்த விபத்தில், எல்கேஜி மாணவி களிஷ்டா, ஒன்றாம் வகுப்பு மாணவி, அனன்யா, செலிஷ்டா, அல்விடா, 7 ஆம் வகுப்பு மாணவி நிகிதா உள்ளிட்ட 6 மாணவிகளும், 2 மாணவர்களும் அதே இடத்தில் பலியானார்கள். மற்றவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.