ஜனாதிபதி விருதை வாங்கச் சென்ற தலைமை ஆசிரியைக்கு நேர்ந்த கொடூரம்

வியாழன், 3 செப்டம்பர் 2015 (13:13 IST)
ஜனாதிபதி விருதை வாங்கச் சென்ற தலைமை ஆசிரியை மீது கொள்ளையர்கள் நடத்திய ரசாயன தாக்குதல் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உலக ஆசிரியர் தினம் செப்டம்பர் 5 ஆம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்படவுள்ளது. இதனை முன்னிட்டு சிறப்பாக பணியாற்றி வரும் ஆசிரியர்களுக்கு ஆண்டுதோறும் ஜனாதிபதி விருது வழங்கப்பட்டு வருவது வழக்கம். அதன்படி  இந்த ஆண்டுக்கான ஜனாதிபதி விருதுபெறுவோர் பட்டியலில் குவாலியரை சேர்ந்த தலைமை ஆசிரியை ரேகா சக்சேனாவின் பெயர் இடம்பெற்றிருந்து.

விருதினை பெரும் பொருட்டு அவர் குவாலியரில் இருந்து புதுடெல்லிக்கு ரயிலில் சென்று கொண்டிருந்தார். ஆக்ரா  மதுரா இடையே ரயில் வந்து கொண்டிருந்தது. அப்போது ரயிலினுள் புகுந்த கொள்ளையர்கள் ஆசிரியை மீது ரசாயனம் கலந்த வேதிப்பொருளை வீசினர். இதனால் சுயநினைவை இழந்த ரேகா ரயில்வே போலீசாரால் மீட்கப்பட்டு மூல்சந்த் நகரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்து வழக்கு பதிவு செய்த ரயில்வே போலீசார் தப்பிச் சென்ற கொள்ளையர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்