வாடிக்கையாளர்களுக்கு மீண்டும் அதிர்ச்சி கொடுத்த எஸ்பிஐ

புதன், 12 ஜூலை 2017 (06:25 IST)
கடந்த சில மாதங்களாகவே எஸ்பிஐ வங்கி தங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு கட்டணங்களை அதிகரித்து அதிர்ச்சி மேல் அதிர்ச்சி கொடுத்து வரும் நிலையில் தற்போது மீண்டும் IMPS என்று கூறப்படும் உடனடி பணப்பரிமாற்றத்திற்கான சேவைக் கட்டணத்தை அதிகரித்துள்ளது.



 
 
இதன்படி எஸ்.பி.ஐ வங்கியில் ஜூலை 1 முதல் ரூ.1000 வரை உடனடி பணப்பரிமாற்ற சேவையின் மூலம் பணப்பரிமாற்ற செய்ய கட்டணங்கள் இல்லை. ஆனால் அதே நேரத்தில் ரூ.1000 முதல் ஒரு லட்சம் ரூபாய் வரை உடனடியாக பணம்பரிமாற்றம் செய்ய ஐந்து ரூபாயும், ஒரு லட்சம் முதல் இரண்டு லட்சம் ரூபாய் வரை உடனடியாக பணம்பரிமாற்றம் செய்ய பதினைந்து ரூபாயும் சேவைக்கட்டணமாக வசூலிக்கப்படும் என்று எஸ்.பி.ஐ அறிவித்துள்ளது.
 
எந்த நேரத்திலும் ஆன்லைன் மூலம் பணப்பரிமாற்றம் செய்யும் இந்த வசதிக்கு தற்போது எஸ்பிஐ சேவைக்கட்டணத்தை அதிகரித்துள்ளது வாடிக்கையாளர்களை அதிருப்தி அடைய செய்துள்ளது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்