6 லட்சம் டெபிட் கார்டுகளை தடை செய்தது எஸ்பிஐ வங்கி

புதன், 19 அக்டோபர் 2016 (17:15 IST)
எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்கிய 6 லட்சம் டெபிட் கார்டுகளை தடை செய்துள்ளதாக அறிவித்துள்ளது.
 

 
நாட்டின் மிகப்பெரிய தேசிய வங்கி எஸ்பிஐ [State Bank of India]. இதன் ஏடிஎம் மையங்களை தனியார் நிறுவனங்கள் நிர்வாகித்து வருகின்றனர். இவர்களில் சிலர் ரகசிய மென்பொருள் மூலமாக வங்கியின் பயனாளர் தொடர்பான ஏடிஎம் விவரங்களை திருடியுள்ளனர்.
 
இந்த தகவலை அடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையை தனது வாடிக்கையாளர்களுக்கு விநியோகிக்கப்பட்டிருந்த 6 லட்சம் டெபிட் கார்டுகளை தடை செய்துள்ளதாகக் எஸ்பிஐ வங்கி அறிவித்துள்ளது.
 
டெபிட் கார்டு தடை செய்யப்பட்ட வாடிக்கையாளர்கள் உடனடியாக, அருகாமையில் உள்ள எஸ்பிஐ அலுவலகம் அல்லது இலவச டோல் ஃப்ரீ அழைப்பு எண்ணை தொடர்பு கொண்டு, தங்களுக்கான புதிய டெபிட் கார்டை விண்ணப்பித்து, பெற்றுக்கொள்ளலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
 
கடந்த ஜூலை மாத நிலவரப்படி, எஸ்பிஐ மற்றும் அதன் துணை வங்கிகள் சார்பாக, நாடு முழுவதும் 4.75 கோடி டெபிட் கார்டுகள் விநியோகிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்