சரிதா நாயரின் ஆபாச படத்தை வாட்ஸ் அப் மூலம் பரப்பிய வாலிபர்கள்

வியாழன், 20 நவம்பர் 2014 (11:25 IST)
கேரளாவைச் சேர்ந்த பெண் தொழில் அதிபர் சரிதா நாயரின் ஆபாச படத்தை வாட்ஸ் அப் மூலம் சவூதி அரேபியாவிலிருந்து பரப்பிய வாலிபர்களை காவல் துறையினர் கைது செய்தனர்.
 
பெண் தொழில் அதிபர் சரிதா நாயரின் ஆபாச படம் செல்போன்களில் வாட்ஸ் அப் மூலம் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
 
இந்த ஆபாச படத்தை வெளியிட்டு தன்னை மிரட்டுபவர்கள் சில அரசியல்வாதிகள் என்றும், இதன் பின்னணியில் ஒரு காவல் துறை அதிகாரி இருப்பதாகவும் சரிதா நாயர் குற்றம் சாட்டி இருந்தார்.
 
இதுபற்றி கேரள காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். அப்போது 28 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வாட்ஸ் அப் மூலம் சரிதா நாயரின் ஆபாச படத்தை தங்கள் செல்போன்களில் பதிவிறக்கம் செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
 
இந்நிலையில் சவூதி அரேபியாவில் வசிக்கும் ஒருவரது செல்போனுக்கு சரிதா நாயரின் ஆபாச படம் வாட்ஸ் அப் மூலம் வந்தது. அவர் இதுபற்றி சவூதி அரேபிய காவல் துறையினரிடம் புகார் செய்தார்.
 
இது குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தியபோது, சவூதி அரேபியாவில் வசிக்கும் 4 கேரள வாலிபர்கள் இந்த ஆபாச படத்தை பரப்பியது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அவர்கள் 4 பேரையும் காவல் துறையினர் கைது செய்தனர்.
 
சவூதி அரேபிய சட்டப்படி ஆபாச படங்கள் பார்ப்பது, வைத்திருப்பது பெரிய குற்றமாகும். இதற்காக 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்கவும் சட்டத்தில் இடம் இருப்பதாகக் கூறப்படுகிறது.
 
கேரளாவில் சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயாரிக்கும் சோலார் பேனல் கருவிகள் அமைத்து தருவதாக கூறி கோடிக்கணக்கில் நடந்த மோசடியில் சரிதா நாயர் கைதானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்