இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவராக சஞ்சய் சிங் தீர்வு..! - கண்ணீருடன் விலகிய சாக்‌ஷி மாலிக்!

வெள்ளி, 22 டிசம்பர் 2023 (10:33 IST)
இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவராக சஞ்சய் சிங் தேர்வு செய்யப்பட்ட நிலையில், மல்யுத்த விளையாட்டிலிருந்து தான் விலகுவதாக  சாக்‌ஷி மாலிக் அதிரடியாக அறிவித்துள்ளார்.


 
பாஜக எம்பியும், மல்யுத்த கூட்டமைப்பின் தலைவருமான பிரிஜ் பூஷன் சிங் மீது சாக்ஷி மாலிக் உள்ளிட்ட மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் புகார் அளித்தனர். மேலும், பிரிஜ்பூஷன் சிங் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி டெல்லி ஜந்தர் மந்தரில் அவர்கள், பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர். நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த குற்றச்சாட்டை அடுத்து, நடைபெற்ற விசாரணையின் இறுதியில், பிரிஜ் பூஷன் சிங் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

இந்நிலையில் நேற்று நடைபெற்ற இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தேர்தலில் பிரிஜ் பூஷணின் நெருங்கிய கூட்டாளிகளில் ஒருவரான சஞ்சய் சிங் என்பவர் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். இது மல்யுத்த வீராங்கனை சாக்‌ஷி மாலிக் உள்ளிட்டோருக்கு பெரும் கவலையை ஏற்படுத்திய நிலையில், மல்யுத்த விளையாட்டிலிருந்து தான் விலகுவதாக சாக்‌ஷி மாலிக் அதிரடியாக அறிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்