சல்மான் கான் வீட்டின் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியினர் கைது

ஞாயிறு, 4 ஜனவரி 2015 (13:13 IST)
இலங்கையில், ராஜபக்சேவுக்கு ஆதரவாக பாலிவுட் நடிகர் சல்மான் கான் பிரச்சாரம் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவிதது, மும்பையில் உள்ள சல்மான்கான் இல்லத்தின் முன்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியினரரை காவல்துறையினர் கைது செய்தனர்.
 
பாலிவுட் நடிகர் சல்மான் கான் இலங்கையில் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் ராஜபக்சேவுக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று அந்நாட்டில் பிரச்சாரம் செய்தார்.
 
சல்மான் கானுடன் பாலிவுட் நடிகையான ஜாக்குலின் பெர்ணாண்டசும் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இதற்கு இலங்கை தமிழர்களும், தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு அரசியல் தலைவர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
 
இந்நிலையில் மும்பையில் உள்ள சல்மான்கான் இல்லத்தின் முன்பு நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். அப்போது சல்மான் கானுக்கு எதிராக அவர்கள் கோஷமிட்டனர்.
 
தமிழர்களான எங்களை மறந்து ராஜபக்சேவிற்கு ஆதரவளித்த சல்மான் கானுக்கு எங்கள் இதயத்தில் இனி இடமில்லை என்று ஆர்ப்பாட்டத்தின் போது அவர்கள் தெரிவித்தனர். அப்போது தமிழர்களின் உணர்வுகளை காயப்படுத்துவதாகக் கூறினர்.
 
இதற்கு சல்மான்கான் மன்னிப்பு கேட்கும் வரை போராட்டம் தொடரும் எனவும் ஆர்ப்பாட்டம் செய்தவர்கள் தெரிவித்தனர்.
 
இந்நிலையில் சல்மான் கான் வீட்டை முற்றுகையிட முற்பட்ட போது, நாம்தமிழர் கட்சியயினரை காவல் துறையில் தைது செய்தனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்