அப்போது கனேஷ் ஜோஷி உருட்டுக்கட்டையால் தாக்கியதில், சக்திமான் என்ற குதிரையின் கால் உடைந்தது. அதன்பின் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, அதன் ஒரு கால் அகற்றப்பட்டு செயற்கை கால் பொருத்தப்பட்டது.
தற்போது, அதன் மறைவிற்கு இந்திய கிரிக்கெட் விராட் கோலி இரங்கல் தெரிவித்துள்ளார். தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் ‘ ஒரு பாவமும் அறியாத அப்பாவி குதிரை சக்திமானின் ஆத்மா சாந்தியடையட்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.