மோடியின் இஸ்ரேல் பயணம்: பின்னணியில் 400 கோடி ரூபாய் டீலிங்!!

வெள்ளி, 7 ஜூலை 2017 (13:29 IST)
பிரதமர் மோடி தற்போது இஸ்ரேல் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இஸ்ரேல் நாட்டிற்குப் பயணம் செய்யும் முதல் இந்திய பிரதமர் மோடிதான். 


 
 
இஸ்ரேல் நாட்டு அரசு இந்தியாவுடன் சேர்ந்து தீவிரவாதத்தை எதிர்க்கவும், பாகிஸ்தானிடம் இருந்து இந்தியாவை இஸ்ரேல் பாதுகாக்கும் என தெரிவித்துள்ளது. 
 
இந்த பயணத்தின் மூலம் இந்திய விமானப் படைக்குத் ஹெரான் டிபி யூஏவி விமானத்தை வாங்க முடிவு செய்துள்ளது இந்திய அரசு. இதன் மதிப்பு 400 மில்லியன் டாலராக இருக்கும்.
 
ஹெரான் டிபி யூஏவி இந்திய விமானப் படையின் பலத்தை பல மடங்கு அதிகரிக்கும். பாகிஸ்தான் மற்றும் சீன எல்லையில் நடக்கும் பிரச்சனைகளை அழிக்க பெரிய அளவில் உதவியாக இருக்கும். 
 
ஹெரான் டிபி யூஏவி விமானம்:
 
# யூஏவி என்பது ஆள்ளில்லா விமானம், இதனை விமானக் கண்காணிப்பிற்காக ரிமோட் கன்ட்ரோல் மூலம் இயக்கக் கூடியவை.
 
# யூஏவி மூலம் கண்காணிப்பு, உளவு பார்த்தல், போர் சேதம் மதிப்பீடு, இலக்கைக் கணித்தல் அல்லது பெறுதல், வான்வழி எரிபொருள் நிரப்புதல், உளவு சேகரிப்பு மற்றும் ஏவுகணை பாதுகாப்பு ஆகியவற்றை செய்யலாம்.
 
# சுமார் 45,000 அடி உயரத்தில் சுமார் 30 மணி நேரம் வரை உளவு பார்க்கும் திறன் கொண்டது. மேலும், 1,000 கிலோ எடையைச் சுமக்கும் திறன் கொண்டது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்