பெண்கள் ரோட்டில் போன் பேசி நடந்தால் ரூ.21,000 அபராதம்!!

புதன், 3 மே 2017 (16:11 IST)
தெருவில் நடந்து செல்லும்போது போன் பயன்படுத்தும் இளம்பெண்களுக்கு ரூ.21,000 அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


 
 
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில்மதுரா மாவட்டத்திற்கு உள்பட்ட மதோரா என்ற கிராமத்தில் மொபைல் போன் வளர்ச்சியால், காதல் திருமணங்கள் அதிகளவில் நடைபெற தொடங்கியுள்ளது. 
 
இதனால், சமூக ஒழுக்கம் சீர்கெடுவதாகக் கருதி, தெருவில் நடந்து செல்லும்போது மொபைல் போன் பயன்படுத்தும் இளம்பெண்களுக்கு ரூ.21,000 அபராதம் விதிக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. 
 
இந்த தவறுகள் குறித்து பஞ்சாயத்து நிர்வாகத்திற்கு தகவல் தருவோருக்கு ரூ.51,000 பரிசு வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. குற்றங்களை குறைப்பதற்காக பஞ்சாயத்து நிர்வாகம் சார்பில் 5 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்