அறுவை சிகிச்சை செய்த ரோபோக்கள்: பெங்களூரில் சாதனை

வியாழன், 22 டிசம்பர் 2016 (16:34 IST)
பெங்களூரில் உள்ள மணிப்பால் மருத்துவமனை ரோபோக்கள் மூலம் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையை பெற்றிகரமாக செய்துள்ளது.


 

 
பெங்களூரில் உள்ள மணிப்பால் மருத்துவமனையில் ஓடிசாவைச் சேர்ந்த சுதிப்தா குமார்(29) மற்றும் சரோஜித் அடக்(35) ஆகியோர் சிறுநீரகம் பாதிப்பு காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்தனர். மருத்துவ சோதனையில் இவர்கள் இருவருக்கும் சிறுநீரகம் செயலிழந்தது தெரியவந்தது.
 
இதையடுத்து மருத்துவர்கள் இவர்கள் இருவருக்கும்  சிறுநீரகம் மாற்று அறுவை சிகிச்சை செய்ய திட்ட்மிட்டனர். இந்த சிக்கலான அறுவை சிகிச்சையை ரோபோக்கள் மூலம் செய்ய திட்டமிட்டனர். இந்த ரோபோக்களின் உபகரணங்கள் 360 டிகிரி சுழலக் கூடியது. 
 
சிகிச்சைக்கு ஒருநாளைக்கு முன் மாதிரி சிகிச்சை செய்து பரிசோதிக்கப்பட்டது. பின்னர் மருத்துவர்கள் முன்னிலையில், ரோபோக்கள் வெற்றிகரமாக சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இந்த அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது. இதையடுத்து நோயாளிகள் இருவரும் தற்போது நல்ல உடல்நிலையில் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்