ஹைதராபாத்தில் தலித் மாணவர் தற்கொலை: மாணவர்கள் போராட்டம்

திங்கள், 18 ஜனவரி 2016 (13:45 IST)
ஹைதராபாத்தில் உள்ள கேந்திராய பல்கலைக்கழகத்தில் சயின்ஸ் டெக்னாலஜி பிரிவில் பி.எச்.டி ஆராய்சிப் படிப்பு மேற்கொண்டு வந்த ரோகித் என்ற தலித் மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

ஆந்திர மாநிலம் குண்டூரைச் சேர்ந்தவர் ரோகித் என்ற மாணவர் ஹைதரா பாத்தில் உள்ள கேந்திராய பல்கலைக்கழகத்தில் சயின்ஸ் டெக்னாலஜி பிரிவில் பி.எச்.டி. படித்து வந்தார்.
 
பல்கலைக்கழக விடுதியில் தங்கி இருந்த ரோகித் ஏழை குடும்பத்தைச் சேர்ந்தவர். கல்வி திறமைக்காக உதவித்தொகை பெற்று வருகிறார். இவர், அம்பேத்கர் மாணவர் பேரவையில் உறுப்பின ராகவும் இருப்பவர்.
 
இந்நிலையில், இவருக்கும் பல்கலைக் கழகத்தின் அகில இந்திய வித்யா பரிஷத் மாணவர் சுசில் என்பவருக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
 
பல்கலைக்கழகத்தில் சாதியின் பெயரில் ஒழுங்கீனம் நடப்பதாகவும் அதனை கட்டுப்படுத்த வேண்டும் என்றும் மத்திய அமைச்சர்களான பண்டாரு தத்தாத்ரேயா, ஸ்மிருதி இரானி ஆகியோர் பல்கலைக்கழகத்திற்கு கடிதம் எழுதினர்.
 
இந்த கடிதத்தின் அடிப்படையில் ரோகித் உள்பட 5 மாணவர்கள் மீது பல்கலைக் கழக நிர்வாகம் இடைநீக்கம் செய்து நடவடிக்கை எடுத்தது.
 
அதன்படி, 5 பேரும் வகுப்புக்கு வரக் கூடாது என்று கூறியதுடன் பருவத் தேர்வை எழுதவும் அனுமதிக்கவில்லை.
 
இந்த இடைநீக்க  நடவடிக்கையை கண்டித்து மாணவர்கள் கடந்த சில நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 
இந்நிலையில் ரோகித் , தனது நண்பர் அறையில், அம்பேத்கர் பேரவை பேனர் துணியை கிழித்து தூக்கு கயிறாக பயன்படுத்தி தற்கொலை செய்து கொண் டார்.
 
அவர், தற்கொலை செய்வதற்கு முன்னர் எழுதியிருந்த கடிதத்தில், பல்கலைக்கழகம் ஒருவரின் திறமையை மதிப்பதில்லை என்றும், சாதி அடிப்படையில் பார்க்கப்படுகிறது என்றும் குறிப்பிட்டிருந்தார்.
 
இது குறித்த தகவல் அறிந்து அங்குவந்த காவல்துறையினரை, சக மாணவர்கள்  நெருங்க விடாமல் தடுத்தனர்.
 
இந்நிலையில், ரோகித் தற்கொலைக்கு மத்திய அமைச்சர்களான பண்டாரு தத்தாத்ரேயா மற்றும் ஸ்மிருதி இரானி ஆகியோர்தான் காரணம். என்றும, அவர்கள் மீது நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்றும் போராட்டம் நடத்திவருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்