கிரீஸ் அருகே அகதிகள் படகு கடலில் கவிழ்ந்து 10 பேர் பலி

வியாழன், 24 டிசம்பர் 2015 (22:29 IST)
கிரீஸ் அருகே அகதிகள் படகு கவிழ்ந்து அதில் இருந்த 10 பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக பலியாயானார்கள்.
 

 
உள்நாட்டுப் போரால் நிலை குலைந்து போய் உள்ள ஈராக், சிரியா மற்றும் ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக சென்ற வண்ணம் உள்ளனர். இவ்வாறு, ஐரோப்பிய நாடுகளில் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ள மக்களின் எண்ணிக்கை சுமார் 10 லட்சத்திற்குமேல் எட்டியுள்ளதாக கூறப்படுகிறது.
 
இந்த நிலையில், கிரீஸ் நாட்டில் நுழைய சிரியா நாட்டைச் சேர்ந்த சிலர் மத்திய தரைக்கடல் வழியாக ரப்பர் படகுகளில் பயணம் செய்துள்ளனர். அப்போது, பார்மகோனிசி தீவு அருகே அந்த படகு சென்ற போது படகு திடீரென நீரில் மூழ்கியது. இதில், 10 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தாக கூறப்படுகிறது.
 
இந்த தகவல் அறிந்த கிரீஸ் கடலோர காவல் படையினர் மற்றும் பேரிடர் மீட்பு குழுவினர் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த 7 பேரை மீட்டனர். 

வெப்துனியாவைப் படிக்கவும்