இனிமேலும் பொருளாதாரம் சரியும்; எப்போ சரியாகும்? – ரிசர்வ் வங்கி !

Webdunia
புதன், 26 ஆகஸ்ட் 2020 (12:47 IST)
கொரோனா பாதிப்பால் ஏற்கனவே நாட்டின் பொருளாதார நிலை பின்னடைவை சந்தித்துள்ள நிலையில் மேலும் சரிவுகள் ஏற்படலாம் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா காரணமாக கடந்த சில மாதங்களாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் பொருளாதார வளர்ச்சி சரிவை சந்தித்துள்ளது. இந்நிலையில் தற்போது ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டு தொழில்கள் மெல்ல ஆரம்பிக்க தொடங்கியுள்ளன. எனினும் முழு முற்றாக ஊரடங்கு நீக்கப்படாததாலும், போக்குவரத்துகள் சகஜ நிலைக்கு திரும்பாததாலும் பொருளாதார வளர்ச்சியில் ஏற்றம் ஏற்படவில்லை என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

முந்தைய காலாண்டை போலவே நடப்பு காலாண்டிலும் பொருளாதாரம் மந்தநிலை அடையும் எனவும், உள்நாட்டு உற்பத்தி மைனஸ் 12 சதவீதம் வீழ்ச்சி காண வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. அடுத்த ஆண்டு ஜனவரி தொடங்கி மார்ச் முதலான காலாண்டில் பொருளாதாரம் மெல்ல ஏற்றம் காண தொடங்கும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்