ஆசைக்கு இணங்காத பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற காவல்துறையினர்

செவ்வாய், 7 ஜூலை 2015 (10:31 IST)
உத்தர பிரதேசத்தில் 2 காவல்துறையினர் ஒரு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளனர். இதற்கு அந்தப் பெண் இணங்காததால் அவர் மீது பெட்ரோல் ஊற்றி எரித்து கொடூரமாகக் கொலை செய்துள்ளனர்.
 
உத்தர பிரதேச மாநிலம் பாராபங்கியில் உள்ள ஒரு கிராமத்தில் இரு கும்பல்களுக்கிடையே சண்டை நடந்துள்ளது. இதுதொடர்பாக ஒரு கும்பல் காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளனர்.
 
இது குறித்து கடந்த ஞாயிற்றுக்கிழமை அந்த கிராமத்தில் உள்ள ஒருவரை காவல்துறையினர் விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனர்.
 
இந்நிலையில், நேற்று காலை வரை  அவர் வீடு திரும்பாததால் அவரது மனைவி கணவரைத் தேடி கோத்தி காவல் நிலையத்திற்குச் சென்றுள்ளார்.
 
அப்போது காவல் நிலையத்தில் இருந்த இரண்டு காவலர்கள் அந்த பெண்ணிடம் இருந்த நகைகளை பறித்துக்கொண்டு, கற்பழிக்க முயன்றுள்ளனர். அதற்கு அவர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார், இதனால், அவர் மீது பெட்ரோலை ஊற்றி தீவைத்துள்ளனர்.
 
இதனால், பலத்த தீ காயம் அடைந்த அந்த பெண் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அப்போது அவர் பாராபங்கி மாவட்ட நீதிபதி யோகேஸ்வர் ராம் மிஸ்ராவிடம் மரண வாக்குமூலம் கொடுத்தார்.
 
அந்த வாக்கு மூலத்தில் தன்ககு நேர்ந்த கொடுமை  அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இரண்டு காவல்துறையிர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அத்துடன் அவர்கள் இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்