தற்போதையை குடியரசுத் தலைவராக இருக்கும் பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் வரும் 24-ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதனையடுத்து அடுத்த குடியரசுத் தலைவர் யார் என்பதை தேர்ந்தெடுக்கும் குடியரசுத் தலைவர் தேர்தல் நாடாளுமன்ற வளாகத்திலும், ஒவ்வொரு மாநில தலைமைச் செயலகத்திலும் கடந்த 17-ஆம் தேதி நடைபெற்றது.
வாக்கு எண்ணும் பணி ஆரம்பிக்கப்பட்டது முதல் பாஜகவின் ராம்நாத் கோவிந்த் முன்னிலை வகித்து வந்தார். எதிர்க்கட்சிகள் சார்பில் போட்டியிட்ட மீரா குமார் 34.35 சதவீத வாக்குகளை பெற்று தோல்வியை தழுவினார். இதன் மூலம் ராம்நாத் கோவிந்த் 65.65 சதவீத வாக்குகளை பெற்று வெற்றிபெற்றார். வெற்றி பெற்ற ராம்நாத் கோவிந்த் நாட்டின் 14-வது குடியரசுத்தலைவராக வரும் 24-ஆம் தேதி பதவியேற்க இருக்கிறார்.