திருப்பதியை விட அதிகமாகிறதா ராமர் கோவில் வருமானம்.. ஒரே நாளில் எத்தனை கோடி தெரியுமா?

Mahendran

வியாழன், 25 ஜனவரி 2024 (12:55 IST)
அயோத்தியில் ராமர் கோயில் சமீபத்தில் திறக்கப்பட்ட நிலையில் ராமர் கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் பக்தர்களின் காணிக்கையும் அதிகரித்து வருவதை அடுத்து கூடிய விரைவில் திருப்பதியை விட அதிக வருமானம் தரும் கோயிலாக ராமர் கோயில் இருக்கும் என்று கருதப்படுகிறது. 
 
ராமர் கோயில் கடந்த  திங்கட்கிழமை திறக்கப்பட்ட நிலையில்  அன்றைய ஒரே நாளில் ஆன்லைனில் மட்டுமே மூன்று கோடிக்கு அதிகமாக காணிக்கை வந்திருப்பதாக ராமஜென்மன் பூமி அறக்கட்டளை தெரிவித்துள்ளது. அடுத்தடுத்த நாள்களில் வந்த காணிக்கைகள் தற்போது எண்ணப்பட்டு வருவதாகவும் இது குறித்து அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. 
 
நாட்டின் மிகப்பெரிய அளவில் வருமானம் வரும் கோயில் ஆக திருப்பதி இருக்கும் நிலையில் இன்னும் சில நாட்களிலேயே அந்த வருமானத்தை ராமர் கோயில் முந்திவிடும் என்று கூறப்படுகிறது. 
 
ராமர் கோயிலுக்கு வரும் பக்தர்களின் கூட்டம் அதிகரித்து வருவதை அடுத்து தரிசன நேரமும் நீடிக்கப்பட்டுள்ளதாகவும் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்