ராஜ்யசபா தேர்தல் 2018: 58 எம்.பி.க்களில் 33 பேர் போட்டியின்றி தேர்வு
புதன், 21 மார்ச் 2018 (20:07 IST)
வரும் 23ஆம் தேதி நடைபெற உள்ள ராஜ்யசபா தேர்தலில் 58 எம்.பி.க்களில் 33 வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வாகியுள்ளனர்.
மீதமுள்ள 25 எம்.பி.க்கள் உத்தரபிரதேசம், மேற்கு வங்கம், கர்நாடகா, ஜார்க்கண்ட், சத்தீஷ்கர் மற்றும் தெலுங்கானா ஆகிய 6 மாநிலங்களில் இருந்து தேர்வு செய்யப்பட உள்ளனர்.
உத்தர பிரதேச மாநிலத்தில் 10 வேட்பாளர்கள் போட்டியிட உள்ள நிலையில் பாஜக 8 இடங்களில் வெற்றிபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்கத்தில் 5 வேட்பாளர்களில் 4 பேரை திரிணாமுல் காங்கிரஸ் முன்னிறுத்தியுள்ளது.
கர்நாடகா மாநிலத்தில் 4 இடங்களுக்கு 3 பேர் ஆளும் கட்சியான காங்கிரஸ் சார்பில் போட்டியிடுகின்றனர். ஜார்க்கண்ட் மாநிலத்தில் 2 இடங்களுக்கு பாஜக சார்பில் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். சத்தீஷ்கர் மாநிலத்திலிருந்து ஒரு இடத்திற்கு பாஜக சார்பில் போட்டியிடுகின்றனர்.
தெலுங்கானா மாநிலத்திலிருந்து உள்ள 3 இடங்களுக்கு ஆளும் கட்சி சார்ப்பில் போட்டியிடுகின்றனர்.