ஏழை என்பதை விளம்பரபடுத்தினால்தான் ரேஷன் பொருட்கள்: ராஜஸ்தான் அரசு அநாகரிகம்!!

வெள்ளி, 23 ஜூன் 2017 (11:49 IST)
ஏழை மக்கள் ரேஷன் பொருட்களை பெற அவர்களின் வீட்டுச் சுவர்களில் ”நான் ஒரு ஏழை” என்ற வாசகத்தை எழுத வேண்டும் என ராஜஸ்தான் மாநில அரசு வற்புறுத்தியுள்ளது.


 
 
ராஜஸ்தான் மாநிலம் உள்ள தவ்சா மாவட்டத்தில் ரேஷன் பொருட்களைப் பெறுவோரின் வீட்டுச் சுவர்களில் ”நான் ஒரு ஏழை” என்ற வாசகத்தினை எழுத வேண்டும் என்று மாவட்ட பஞ்சாயத்து நிர்வாகம் வர்புறுத்துவதாக புகார் எழுந்துள்ளது.
 
அவ்வாறு எழுதினால் தான் ரேஷன் பொருட்கள் தரப்படும் என்றும் கூறப்பட்டுள்ளதாம். இதனால், தங்களின் பொருளாதார நிலை குறித்து மற்றவர்கள் ஏளனம் செய்யும் நிலைக்கு ஆளாகியுள்ளதாகவும் மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். 
 
இந்த சம்பவத்தால் வசுந்த்ரா ராஜே தலைமையிலான பாஜக அரசு சர்ச்சையில் சிக்கியுள்ளது. இது குறித்து இன்னும் எந்தவித நடவடிக்கையும் மத்திய அரசு மேற்கொள்ளவில்லை என தெரிகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்