பயணிகள் ரயில் சேவையால் லாபமில்லை, நஷ்டம் தான்: மத்திய அமைச்சர் தகவல்

Webdunia
வெள்ளி, 28 அக்டோபர் 2022 (18:16 IST)
பயணிகள் ரயில் சேவையால் எந்தவித லாபமும் இல்லை என்றும் பயணிகள் ரயில் சேவையால் நஷ்டம்தான் என்றும் மத்திய ரயில்வே இணை அமைச்சர் தெரிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
ரயில் கட்டணம் குறைவாக இருப்பதால் ரயில் சேவையை பலர் பயன்படுத்தி வருகின்றனர் என்பது தெரிந்ததே. முன்பதிவு செய்த ரயில்கள், முன்பதிவு இல்லாத ரயில்கள் ஆகியவற்றை ஏழை எளியோர், நடுத்தர வர்க்கத்தினர் அதிகம் பயன்படுத்தி வருகின்றனர்
 
 இந்த நிலையில் பயணிகள் ரயிலை இயக்குவதால் ரயில்வே துறைக்கு எந்தவித லாபமும் இல்லை என ரயில்வே இணை அமைச்சர் ராவ் சாஹிப் அவர்கள் தெரிவித்துள்ளார் 
 
தினசரி பயணிகள் ரயில்களை இயக்குவதால் எந்தவித லாபமும் இல்லை என்றும் ஒரு ரூபாய் செலவு செய்தால் 55 காசுகள் நஷ்டம் தான் ஆகிறது என்றும் தெரிவித்துள்ளார் 
 
ஆனால் அதே நேரத்தில் பயணிகள் ரயிலை லாபத்திற்காக அரசு இயக்கவில்லை என்றும் மக்களின் நன்மைக்காக இயக்கி வருகிறது என்றும் தெரிவித்துள்ளார். பயணிகள் ரயில் சேவையால் ஏற்படும் நஷ்டத்தை சரக்கு ரயில் சேவை மற்றும் மற்ற வருவாய் மூலம் தான் சரிக்கட்ட முயற்சி செய்கிறோம் என்றும் அவர் கூறியுள்ளார்
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்