டெல்லி பாரத ஸ்டேட் வங்கியில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி புதிய ரூபாய் நோட்டு பெற பொதுமக்களுடன் வரிவையில் நிற்கிரார்.
500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லது என்று அறிவித்தை தொடர்ந்து அனைவரும் பழைய ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் மாற்றி வருகின்றனர்.
இந்தியா முழுவதும் 10 சதவீத ஏடிஎம் மையங்கள் மட்டுமே இன்று செயல்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் ஏடிஎம்களிம் பணம் எடுக்க முடியாமல் வங்கிகளில் நெரிசலுக்கு மத்தியில் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் டெல்லி நாடாளுமன்றம் அருகே உள்ள பாரத ஸ்டேட் வங்கியில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி பழைஅய ரூபாய் நோட்டுகளை மாற்ற பொதுமக்களுடன் வரிசையில் நின்றுக் கொண்டிருக்கிறார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:-
பொதுமக்கள் பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். அவர்களுடன் கஷ்டத்தை பங்கெடுத்து, அவர்களுக்கு ஆதரவு அளிப்பதற்கு நானும் இங்கு வந்துள்ளேன்.
4000 ரூபாய் வரை ரூபாய் நோட்டுகள் மாற்ற உள்ளேன், என்றார்.
மேலும் அவர் பாதுகாப்பு படையினர் மத்தியில் பாதுகாப்பாக பொதுமக்களுடன் வரிசையில் நின்று வருகிறார்.