காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி நடத்தி வந்த பாரத ஒற்றுமை யாத்திரை (Bharat Jodo Yatra) இன்றுடன் நிறைவடைய உள்ளது.
இந்தியா முழுவதும் ஒற்றுமையை வலியுறுத்தி பாரத் ஜோடோ யாத்திரை என்னும் இந்திய ஒற்றுமை யாத்திரையை கடந்த ஆண்டு செப்டம்பர் 7ம் தேதி ராகுல் காந்தி தொடங்கினார். தமிழ்நாட்டில் குமரி முனையிலிருந்து தொடங்கிய இந்த யாத்திரை தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்ட்ரா, குஜராத், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், டெல்லி என பல மாநிலங்களை கடந்து தற்போது காஷ்மீரை அடைந்துள்ளது.
இன்றுடன் இந்த பாரத ஒற்றுமை யாத்திரை காஷ்மீர் ஸ்ரீநகரில் நிறைவடைய உள்ளது. இதுகுறித்து பேசிய ராகுல்காந்தி பாரத ஒற்றுமை யாத்திரை நாடு முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்று கூறியுள்ளார். இன்று ஸ்ரீநகரில் யாத்திரை நிறைவை தொடர்ந்து பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடத்தப்பட உள்ளது. இதில் காங்கிரஸ் முக்கிய தலைவர்களுடன் கூட்டணி தலைவர்களும் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.