திருப்பதியில் பக்தர்கள் கூட்டம்... 40 மணி நேரம் காத்திருந்து தரிசனம்!

திங்கள், 15 ஆகஸ்ட் 2022 (10:25 IST)
திருப்பதியில்  நேற்று அதிகாலை 3 மணியில் இருந்து மாலை 6 மணி வரை கோவிலில் 60,000 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.


இரண்டாவது சனி, ஞாயிறு மற்றும் சுதந்திர தினம் என்று தொடர் விடுமுறை காரணமாக திருப்பதிக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. திருப்பதியில் உள்ள அறைகள் அனைத்திலும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி இருப்பதாகவும் இலவச தரிசனத்திற்கு சுமார் 3 கிலோமீட்டர் வரை பக்தர்கள் வரிசையில் காத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

இலவச தரிசனத்துக்கு செல்லும் பக்தர்கள் 20 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்வதாகவும்  300 ரூபாய் தரிசன கட்டணத்திற்கு 5 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்து வருவதாகவும் அது மட்டுமின்றி அதிக அளவில் பக்தர்கள் கூட்டம் இருப்பதால் லட்டு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியானது.

இதனைத்தொடர்ந்து 2-வது நாளாக பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது என  தகவல் வெளியாகியுள்ளது. நேற்று பக்தர்கள் கூட்டம் கோவிலில் இருந்து வெளிவட்டச்சாலை வரை 5 கிலோ மீட்டர் தூரத்துக்கு வரிசையில் காத்திருந்தனர். அவர்கள் 40 மணிநேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

நேற்று அதிகாலை 3 மணியில் இருந்து மாலை 6 மணி வரை கோவிலில் 60,000 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். திருமலையில் குவிந்துள்ள பக்தர்கள் கூட்டம் இன்று மாலை வரை நீடிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

மேலும், கடந்த 2 நாட்களில் வழக்கத்தை விட பக்தர்களுக்கு 2 மடங்கு அதிகமான பிரசாதம் வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்