ஜம்மு சட்டசபையில் எதிர்க்கட்சியினர் மீண்டும் அமளி

செவ்வாய், 6 அக்டோபர் 2015 (12:26 IST)
ஜம்மு காஷ்மீர் சட்டசபையில் எதிர்க்கட்சிகளின் கடும் அமளியால் இரண்டாவது நாளாக இன்றும் அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன.


 
ஜம்மு காஷ்மீர் சட்டசபையில் அலுவல் ஆய்வுக் கூட்டம் நேற்று தொடங்கியது. எதிர்க்கட்சிகளின் கடும் அமளியால் நேற்று அவை நடவடிக்கை பாதிக்கப்பட்ட நிலையில் இன்று காலை அவை மீண்டும் கூடியது.

இந்நிலையில் இன்று காலை மீண்டும் அவை கூடியது. அப்போது எழுந்த எதிர்க்கட்சியினர் ஷரத்து 35 குறித்து விவாதிக்க வேண்டி அனுமதி கோரினர். ஆனால் அவைத் தலைவர் கோவிந்தர் குப்தா  அதற்கு அனுமதி வழங்க மறுத்தார்.

இதனைத் தொடர்ந்து எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டனர். எதிர்கட்சியினரின் அமளியால் அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

வெப்துனியாவைப் படிக்கவும்