நாடு முழுவதும் உள்ள 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி கடந்த 8-ஆம் தேதி இரவு அறிவித்தார். இதற்கு பதிலாக புதிய 2000, 500 ரூபாய் நோட்டுகளை பெறலாம் என கூறப்பட்டது. கருப்பு பணத்தையும், கள்ள பணத்தையும் ஒழிக்கவே இந்த நடவடிக்கை என கூறியது மத்திய அரசு.
தங்கள் பணத்தை மக்கள் எடுக்க விதிக்கப்பட்டிருக்கும் ஏராமளமான கட்டுப்பாடுகள். புதிய நோட்டுகளின் கடுமையான தட்டுப்பாடு. முடங்கி கிடக்கும் ஏடிஎம்கள். மருத்துவம், திருமணம் என அவசர கால தேவையை பூர்த்தி செய்ய முடியாமல் தவிக்கும் மக்களின் சிரமத்தை சொல்லி மாளாது.
இதனால் தற்போது காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் போராட்டத்தை அறிவித்துள்ளது. தங்கள் சொந்த பணத்தை செலவழிக்கும் வாய்ப்பு மக்களுக்கு மறுக்கப்பட்டுள்ளது. இந்த ரூபாய் நோட்டு தடையால் அரசு தோல்வியடைந்துள்ளது என குற்றச்சாட்டை வைத்து வரும் 28-ஆம் தேதி அனைத்து மாநிலங்களிலும் போராட்டங்கள் நடத்தப்படும் எனவும் வங்கிகள் முன்பு ஆர்பாட்டம் நடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.