ஹர்திக் பட்டேலை ஆஜர்படுத்த குஜராத் அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

புதன், 23 செப்டம்பர் 2015 (08:59 IST)
கைது செய்யப்பட்ட ஹர்திக் பட்டேலை நாளைக்குள் ஆஜர்படுத்த வேண்டும் என்று குஜராத்  அரசுக்கு அம்மாநில உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 


 

 
 
குஜராத்தின் மேட்டுக்குடி வர்க்கமான பட்டேல் சமூகத்திற்கு இடஒதுக்கீடு கேட்டு பல மாதங்களாக ஹர்திக் பட்டேல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். கடந்த 19 ஆம் தேதி சூரத்தில் அனுமதியின்றி போரராட்டத்தில் ஈடுபட முயன்ற ஹர்திக் பட்டேலை போலீசார் கைது செய்தனர். ஆனால் சிறிது நேரத்திலேயே அவர் விடுவிக்கப்பட்டார்.
 
இந்நிலையில் அரவாலி மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றில் முன் அனுமதியின்றி கூட்டத்தை நடத்த முயன்றதாக ஹர்திக் பட்டேலை போலீசார் கைது செய்தனர். ஆனால் ஹர்திக் பட்டேல் சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டிருப்பதாக அவரது வழக்கறிஞர் உயர்நீதிமன்றத்தில் ஒன்றை தாக்கல் செய்தார்.
 
இதனை அவசர வழக்காக கருதிய அம்மாநில உயர்நீதிமன்றம் இன்று அதிகாலை 2.30 மணிக்கு கைது செய்யப்பட்டுள்ள ஹர்திக் பட்டேலை நாளைக்குள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. ஹர்திக் பட்டேலுக்காக அதிகாலை 2.30 மணி வரை நீதிமன்றம் கூடியது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்