பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு ப்ரியங்கா காந்தி கண்டனம்!

வியாழன், 10 ஜூன் 2021 (21:51 IST)
இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல் படுத்தப்பட்ட நிலையில் ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்கள் அடிப்படை தேவையான உணவு உடை இல்லாமல் கஷ்டப்பட்டு கொண்டிருக்கின்றனர்
 
இந்த நிலையில் மத்திய அரசு தினந்தோறும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்தி வருகிறது என்பதும் சர்வதேச சந்தையில் விலை உயர்ந்த போதிலும் விடாப்பிடியாக பெட்ரோல் டீசலுக்கான வரியை குறைக்க அரசுகள் முன்வருவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து பல அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்தும் மத்திய மாநில அரசுகள் பெட்ரோல் டீசல் விலையை குறைக்கவில்லை 
 
இந்த நிலையில் பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தனது கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளார். அவர் இதுகுறித்து கூறிய போதும் கொரோனா தொற்றால் மக்கள் மிகவும் நெருக்கடியில் சிக்கி தவித்துக் கொண்டிருக்கும் நிலையிலும் பெட்ரோல் டீசல் விலையை உயர்த்தி மத்திய அரசு லாபம் பார்க்கிறது என்று தெரிவித்துள்ளார். பிரியங்கா காந்தியின் இந்த கண்டனம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்