சிறையில் அதிகாரிகளால் தாக்கப்பட்ட இந்திராணி முகர்ஜி...

வியாழன், 29 ஜூன் 2017 (13:36 IST)
ஷீனா போரா கொலை வழக்கில்  கைது செய்யப்பட்டுள்ள இந்திராணி முகர்ஜியை சிறைத்துறை அதிகாரிகள் கடுமையாக தாக்கியது தெரியவந்துள்ளது.


 

 
மும்பை பைகுல்லா சிறையில் இந்திராணி முகர்ஜி அடைக்கப்பட்டுள்ளார். அந்நிலையில், கடந்த 23ம் தேதி மஞ்சுளா என்ற பெண் கைதி அதிகாரிகளால் கொடூரமாக தாக்கப்பட்டு சிறையிலேயே உயிரிழந்தார். இதனால் கோபம் அடைந்த பெண் கைதிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சிறையில் உள்ள பொருட்கள் மற்றும் ஆவணங்களுக்கு தீ வைத்தனர்.
 
இந்த போராடத்திற்கு முக்கிய காரணமாக இருந்ததாக கூறி, இந்திராணி முகர்ஜி மீது சிறைத்துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில், தன்னை அதிகாரிகள் கொடூரமாக தாக்கியதாக கூறி மும்பை சிபிஐ நீதிமன்றத்தில் இந்திராணி முகர்ஜி தனது வழக்கறிஞர் மூலமாக முறையிட்டார். எனவே, அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார். அதில், அவர் கொடூரமாக தாக்கப்பட்டது நிரூபணம் ஆனது.
 
எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிகிறது. இறந்து போன மஞ்சுளாவை கடுமையாக தாக்கி, அவர் மரணமடைய காரணமாக இருந்த 6 சிறைத்துறை அதிகாரிகள் மீது போலீசார் ஏற்கனவே கொலை வழக்குப்பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்