ரூபாய் நோட்டு தட்டுப்பாடு ; 500 ரூபாய் நோட்டுகள் அச்சடிப்பு அதிகரிப்பு

ஞாயிறு, 25 டிசம்பர் 2016 (11:06 IST)
ரூபாய் நோட்டு அறிவிப்பின் காரணமாக எழுந்துள்ள தட்டுப்பாட்டை சமாளிக்க 500 ரூபாய் நோட்டுகளை அதிக அளவில் அச்சடித்து பொதுமக்களுக்கு விநியோகிக்க மத்திய அரசு முயன்று வருகிறது.


 

 
மக்களிடம் உள்ள ரூ.500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என கடந்த மாதம் 8ம் தேதி பிரதமர் மோடி அறிவித்தார். ஆனால், வங்கிகளிலும், ஏ.டி.எம் மையங்களிலும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள்தான் மக்களுக்கு கிடைக்கிறது. 100 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் இல்லாததால், சில்லரையும் கிடைப்பதில்லை.  இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். 
 
மேலும், 100 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் இல்லாததால் பெரும்பாலான ஏ.டி.எம் மையங்கள் மூடிக் கிடக்கின்றன. இதனால் பணம் எடுக்க வழியில்லாமல் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். 
 
எனவே, தற்போது 500 ரூபாய்  நோட்டுகளை அதிக அளவில் அச்சடிக்கும் பணியை முடிக்கிவிட்டுள்ளது மத்திய அரசு. மராட்டிய மாநிலம், நாசிக்கில் உள்ள அச்சகத்தில் ரூ.500 நோட்டுகள் அச்சடிப்பு 3 மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதனால், தற்போது ஒரு நாளைக்கு 1 கோடி நோட்டுகள் அச்சடிக்கப்பட்டு வருகிறது. 
 
அந்த ரூபாய் நோட்டுகள் விரைவில் மத்திய ரிசர்வ் வங்கிக்கு கொண்டு செல்லப்பட்டு வங்கிகளுக்கு விநியோகிக்கப்படும் எனவும், இதனால் விரையில் பணத்தட்டுப்பாடு நீங்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்