பிரதமர் மோடி ’வெளிநாடு வாழ் இந்தியர்’ - காங்கிரஸ் கிண்டல்

வெள்ளி, 25 செப்டம்பர் 2015 (19:21 IST)
பிரதமர் நரேந்திர மோடி தற்போது அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், அவரை என்.ஆர்.ஐ. பிரதமர் (வெளிநாடு வாழ் பிரதமர்) என காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.
 

 
மோடி பிரதமர் பதவியேற்ற பதினைந்து மாதங்களில் 29 வெளிநாடுகளுக்கு பயணித்துள்ளார்; இதனால் நாட்டுக்கு என்ன நன்மை விளைந்திருக்கிறது? என்றும் கேள்வி எழுப்பியுள்ளது.
 
மக்கள் பணத்தில் இருநூறு கோடி ரூபாய்க்கும் அதிகமாக செலவு செய்து, வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொண்டுள்ள மோடி, எந்தெந்த நாடுகளிலிருந்து, இந்தியாவிற்கு எத்தனை கோடி ரூபாய் முதலீடுகளைக் கொண்டு வந்துள்ளார்? என்பதைத் தெரிவிக்க வேண்டும் என்று காங்கிரஸின் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சூரஜ்வாலா கூறியுள்ளார்.
 
பிரதமரது சுற்றுலாக்கள் அவரது முந்தைய பயணங்களின் வெற்றியைக் கொண்டே அமைய வேண்டுமே தவிர நமது நாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைக்கக் கூடாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், பிரதமராக பதவியேற்ற பதினைந்து மாதங்களில் மூன்றரை மாதங்களை வெளிநாடுகளிலேயே மோடி கழித்திருப்பதாக ரன்தீப் குற்றம்சாட்டியுள்ளார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்