பிரதமர் மோடி மற்றும் ரிசர்வ் வங்கி ஆளுநர் மீது காவல் நிலையத்தில் புகார்!

Webdunia
சனி, 26 நவம்பர் 2016 (08:46 IST)
ஆந்திர மாநிலம் குண்டூர் அடுத்த பிரங்கிபுரம் காவல்நிலையத்தில் பிரதமர் மோடி மற்றும் ரிசர்வ் வங்கி ஆளுநர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.


 



பொத்தபேட்டா காலனியை சேர்ந்த ஓய்வு பெற்ற தீயணைப்புத்துறை அதிகாரியான இன்னையா, பழைய நோட்டுகளை மாற்றுவதற்காக கடந்த 11-ந் தேதி வீட்டுக்கு அருகேயுள்ள வங்கிக்கு சென்றார். பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டிருந்த அவர், காலை முதல் மாலை வரை வரிசையில் காத்திருந்த நிலையில், திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார். இந்நிலையில், தனது கணவரின் மரணத்திற்கு பிரதமர் மோடியும், ரிசர்வ் வங்கி ஆளுநருமே காரணம் எனக் கூறி, பிரங்கிபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். மேலும், தங்கள் குடும்பத்திற்கு 25 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், அந்த புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுகுறித்து என்ன நடவடிக்கை எடுப்பது என பிரங்கிபுரம் போலீஸார் ஆலோசித்து வருகின்றனர்
அடுத்த கட்டுரையில்