ஜனாதிபதி பதவியேற்றவுடன் முதல்முறையாக தமிழகம் வரும் திரெளபதி முர்மு?

Webdunia
வியாழன், 9 பிப்ரவரி 2023 (12:05 IST)
ஜனாதிபதியாக பொறுப்பேற்றுக் கொண்டவுடன் திரௌபதி முர்மு முதல்முறையாக தமிழகம் வர இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன. 
 
இந்திய ஜனாதிபதியாக திரௌபதி முர்மு கடந்த ஆண்டு ஜூலை மாதம் 25ஆம் தேதி பதவி ஏற்றுக்கொண்டார். குடியரசு தலைவராக தேர்ந்தெடுக்கப்படும் முதல் பழங்குடியின அரசியல்வாதி மற்றும் இரண்டாவது பெண் இவர் என்ற பெருமையை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
15ஆவது குடியரசுத் தலைவராக பதவி ஏற்று கொண்ட திரௌபதி முர்மு முதல் முறையாக தமிழகம் வர இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன. அவர் பிப்ரவரி பிப்ரவரி 18ஆம் தேதி மதுரை வர இருப்பதாகவும் அன்றைய தினம் அவர் மீனாட்சி அம்மனை தரிசிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்