ரேஷன் கடையாக மாறும் தபால் நிலையங்கள்!

சனி, 15 அக்டோபர் 2016 (18:31 IST)
நாடு முழுவதும் உள்ள அஞ்சலகங்களில் பருப்பு வகைகளை மானிய விலையில் விற்பனை செய்வது என மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.
 

 
தலைநகர் புதுடெல்லியில், மத்திய நுகர்வோர் விவகார செயலாளர் ஹேம் பாண்டே தலைமையில் நடைபெற்ற அமைச்சகங்களுக்கு இடையிலான குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தின் இறுதியில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
 
பண்டிகைக் காலங்களையொட்டி பருப்பு வகைகள் தட்டுப்பாடு இல்லாமல் மக்களுக்கு கிடைப்பதற்கு அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது என்றும் இதை மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
 
நாடு முழுவதும் 1.54 லட்சம் அஞ்சல் அலுவலகங்கள் உள்ளன. இதில் 1.39 லட்சம் கிராமப்புறங்களில் உள்ளன.
 
நரேந்திர மோடி தலைமையிலான அரசு பருப்பு வழங்க வேண்டிய ரேசன் கடைகளை இழுத்து மூடிவிட்டு, தபால் தலை விற்க வேண்டிய அஞ்சலகத்தில் பருப்பு விற்கப் போகிறது என்று பொதுமக்கள் கவலையுடன் தெரிவித்தனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்