டெல்லியில் உள்ள கரோல் பாக் பகுதியில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் இந்தி நடிகை பூஜா மிஸ்ரா ஷாப்பிங் சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த கடை ஊழியர் ஒருவர், தன்னை கிண்டல் செய்தார் என்று கூறி, அந்த இளைஞரை கடுமையாகத் திட்டி அடித்து, தாக்கியுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.