நித்தீஷ்குமாரை புறக்கணிக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி

வெள்ளி, 4 செப்டம்பர் 2015 (07:47 IST)
பீகாரில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கும் கருத்தரங்கில் அம்மாநில முதலமைச்சர் நித்தீஷ்குமாருக்கு அழைப்பு விடுக்கப்படாதது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
 
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி பீகாரில் நாளை நடைபெறும் கருத்தரங்கில் கலந்து கொள்ள உள்ளார். சர்வதேச விவேகானந்தா அறக்கட்டளை மற்றும் டோக்கியோ அறக்கட்டளை இணைந்து நடத்தும் கருத்தரங்கில் அவர் பங்கேற்க உள்ளார். பீகார் பயணத்தின் போது  அவர் சரித்திர புகழ்பெற்ற புத்தகையா ஆலயத்திற்கும் செல்ல உள்ளார்.
 
தலைநகர் புதுடெல்லியில் இருந்து புத்தகையா விமான நிலையத்திற்கு வரும் அவரை அம்மாநில கவர்னர் ராம்நாத் கோவிந்த் வரவேற்க உள்ளார். பிரதமர் பங்கேற்கும் இந்த கருத்தரங்கில் கலந்து கொள்வதற்கான அழைப்பிதழ் பீகார் முதலமைச்சர் நித்தீஷ்குமாருக்கு வழங்கப்படவில்லை.
 
கடந்த ஜூலை 25 ஆம் தேதி பீகாரில் நடைபெற்ற அரசு விழாவில் பிரதமர் மோடியும், நித்தீஷ்குமாரும் ஒரே மேடையில் தோன் றினர். அரசு விழா நிறைவடைந்த பின்பு பாட்னாவில் நடைபெற்ற பாஜக பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்ட மோடி, நித்தீஷ்குமாரின் அரசியலில் டி.என்.ஏ பிழை இருப்பதாக கடுமையாக விமர்சித்திருந்தார்.
 
இதற்கு பதிலடி தரும் விதமாக பீகார் மக்கள் தங்களின் டி.என்.ஏ மாதிரியைா பிரதமருக்கு அனுப்பி வைத்து தங்களின் எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். இதனைத் தொடர்ந்து ஏராளமான பொதுமக்கள் தங்களின் டி.என்.ஏ மாதிரியை பிரதமருக்கு அனுப்பிவைத்தனர்.
இந்த நிகழ்வின் எதிரொலியே நித்தீஷ்குமாருக்குஅழைப்பிதழ் அளிக்கப்படாதற்கு காரணம் என்று கருதப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்