நாளை திருப்பதி வருகிறார் பிரதமர் மோடி: 3 ஆயிரம் போலீசார் குவிப்பு

புதன், 21 அக்டோபர் 2015 (09:54 IST)
பிரதமர் நரேந்திர மோடி நாளை திருப்பதி வருவதை முன்னிட்டு 4 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.


 
 
ஆந்திர மாநிலத்தின் புதிய தலைநகரான அமராவதிக்கு அடிக்கல் நாட்டும் விழா நாளை நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்வதற்காக காலை 9.25 மணிக்கு டெல்லியில் இருந்து புறப்படும் மோடி, பகல் 11.55 மணிக்கு திருப்பதி சென்றடைய உள்ளார்.
 
அமராவதிக்கு அடிக்கல் நாட்டிய  பிறகு அங்கிருந்து அவர் நேராக திருப்பதி ஏழு மலையான் கோயிலுக்கு செல்ல உள்ளார். பின்னர் 4.20 மணிக்கு திருப்பதி செல்லும் அவர் சுவாமி தரிசனம் செய்கிறார்.
 
மோடியின் திருப்பதி வருகையை முன்னிட்டு பாதுகாப்பு பணியில் 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்