நாடு முழுவதும் பசுவதை தடை சட்டத்தை அமல்படுத்த வேண்டும் - பாபா ராம்தேவ்

செவ்வாய், 6 அக்டோபர் 2015 (21:18 IST)
உத்தரப்பிரதேசத்தில் அமல்படுத்தப்பட்டது போல நாடு முழுவதும் பசுவதை தடைச் சட்டத்தை பிரதமர் அமல்படுத்தவேண்டும் என யோகா குரு பாபா ராம்தேவ் கூறியுள்ளார்.
 

 
இதுகுறித்து அவர் கூறுகையில், “பசுவதை தடைச் சட்டத்தை உத்தரப்பிரதேச மாநிலத்தில் பசுவதை தடைச்சட்டத்தை கொண்டுவர முடியுமெனில், தேசம் முழுவதிலும் பசுவதை தடைச் சட்டத்தை அமல்படுத்துவது குறித்து பிரதமர் நரேந்திர மோடி சிந்திக்க வேண்டும்.
 
அப்போதுதான் மாட்டிறைச்சி உண்பது குறித்து நடத்தப்படும் அனைத்து அழுக்கு அரசியல் விளையாட்டையும் நிறுத்த முடியும்” என்றார். 
 
உத்தரப்பிரதேச மாநிலத்தில் 50 வயது முதியவரான மொஹமது அக்லாக் என்பவர் மாட்டிறைச்சி சாப்பிட்டதாகக் கூறி கிராமவாசிகள் சிலரால் அடித்துக் கொல்லப்பட்டது குறித்து பாஜகவும், சமாஜ்வாதி கட்சியும் ஒன்றை ஒன்றை குற்றம்சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்