இந்நிலையில் கூட்டத்தொடர் தொடங்கும் முன்னதாக பேசிய பிரதமர் மோடி “இந்த ஆண்டு பட்ஜெட் தாக்கல் உலக அளவில் இந்திய பொருளாதாரத்தை உயர்த்தும் வகையில் இருக்கும். நாடாளுமன்ற கூட்டத்தொடரில் எந்த வித ஒளிவு மறைவுமின்றி அனைத்து விஷயங்கள் குறித்தும் வெளிப்படையாக விவாதிக்க தயார்” என தெரிவித்துள்ளார்.