பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய, “அப்போது பேசிய மெக்சிகோ ஜனாதிபதி, அணுசக்தி விநியோக நாடுகள் குழுவில் இந்தியா இடம்பெற மெக்சிகோவும் ஆதரவு அளிக்கும் என தெரிவித்தார்.தொடர்ந்து மோடி பேசுகையில், இந்தியாவை ஆதரித்த முதல் லத்தீன் அமெரிக்க நாடு மெக்சிகோ தான்.
கடந்த இரண்டு ஆண்டுகளில் நாங்கள் 3 முறை சந்தித் துள்ளோம். எங்களிடையே உண்மையான நட்பு ஏற்பட் டுள்ளது. விண்வெளி, அறி வியல், தொழில்நுட்ப துறைகளில் இந்தியா-மெக்சிகோ உறவு மேலும் வலுப்படுத்தப் படும்.
சூரிய சக்தி, உயிரி தொழில்நுட்பம், வேளாண்துறை, பேரிடர் முன்னெச்சரிக்கைக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படும். இரு நாடுகளுக்கு இடையேயான உறவை மேம் படுத்திக் கொள்ள இந்தியா- மெக்சிகோ இடையே ஒப்புதல் அளித்துள்ளோம்” என்றார்.