மோடியின் வீடியோ கான்பரன்ஸ் மீட்டிங்கை புறக்கணித்த முதல்வர்! பின்னணி என்ன?

திங்கள், 27 ஏப்ரல் 2020 (14:04 IST)
கேரள முதல்வர் பினராயி விஜயன் மோடி ஏற்பாடு செய்துள்ள மாநில முதல்வர்களுடனான கூட்டத்தைப் புறக்கணித்துள்ளதாக சொல்லப்படுகிறது.

கொரோனா வைரசை கட்டுப்படுத்த மத்திய அரசு மே. 3 வரை ஊரடங்கு பிறப்பித்துள்ள நிலையில் மே 3ஆம் தேதிக்கு பின்னர் ஊரடங்கு நீட்டிப்பு குறித்து பிரதமர் மோடி அனைத்து மாநில முதல்வர்களுடன் இன்று வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனை நடத்த உள்ளார். இந்த ஆலோசனையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உள்பட அனைத்து மாநில முதல்வர்களுடன் ஆலோசனை செய்யும் பிரதமர் மோடி, அதன்பின்னர் ஊரடங்கு நீட்டிப்பு தொடர்பாக முக்கிய அறிவிப்பை வெளியிடுவார் என கூறப்படுகிறது.

இந்நிலையில் இந்த வீடியோ கூட்டத்தை கேரள முதல்வர் பினராயி விஜயன் புறக்கணித்துள்ளதாக செய்திகள்  வெளியாகியுள்ளன. அவருக்கு பதில் அம்மாநில தலைமைச் செயலாளார் டாம் ஜோஸ் கலந்துகொள்வார் என்று அம்மாநில அரசு இன்று தெரிவித்துள்ளது. இதுகுறித்த பின்னணி குறித்து செய்தி வெளியாகியுள்ளது. அதில் இன்று நடக்கும் ஆலோசனையில் ஏழு மாநில முதல்வர்களே பேச வேண்டும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. பிகார், ஒடிசா, ஹரியானா, குஜராத், உத்தரகாண்ட், இமாசல பிரதேசம், புதுச்சேரி ஆகிய முதல்வர்கள் மட்டுமே பேசுகின்றார்கள். கேரள முதல்வரின் பெயர் இடம் பெறாததால் அவர் கலந்துகொள்ள வில்லை என சொல்லப்படுகிறது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்