விவசாயிகள் மீது கார் ஏற்றிய வீடியோவை பதிவு செய்தவர் சுட்டுக்கொலை?

புதன், 6 அக்டோபர் 2021 (08:16 IST)
விவசாயிகள் மீது கார் ஏற்றிய வீடியோவை பதிவு செய்தவர் சுட்டுக்கொலை?
உத்தரபிரதேச மாநிலத்தில் விவசாயிகள் மீது காரை ஏற்றி கொலை செய்த வீடியோ எடுத்த செய்தியாளர் சுட்டுக் கொலை செய்யப்பட்டதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
 
கடந்த சில நாட்களுக்கு முன்னர் உத்தரப்பிரதேச மாநிலத்தில் விவசாயிகள் வேளாண்மை சட்டத்திற்கு எதிராக போராடிக் கொண்டிருந்தபோது திடீரென அந்த கூட்டத்தில் கார் மோதியது. இதில் நான்கு விவசாயிகள் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது
 
இந்த நிலையில் விவசாயிகள் கார் மோதி கொல்லப்பட்டதை வீடியோ பதிவு செய்த செய்தியாளர் ராமு காஷ்யப் என்பவரை சுட்டுக் கொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து அவரது குடும்பத்தினர் பரபரப்பு குற்றச்சாட்டு கூறியுள்ள நிலையில் விசாரணை செய்ய வேண்டுமென வலியுறுத்தப்பட்டு வருகிறது
 
விவசாயிகள் மீது கார் மோதி கொல்லப்பட்ட வீடியோவை பதிவு செய்தவர் சுட்டுக்கொலை என்ற செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்