மாதந்தோறும் சராசரியாக 5000 தொலைபேசிகளை ஒட்டுக்கேட்க உள்துறை அமைச்சகம் அனுமதி

வியாழன், 5 மார்ச் 2015 (13:26 IST)
உள்துறை அமைச்சகம், மாதந்தோறும் சராசரியாக 5,000 தொலைபேசிகளின் உரையாடல்களை ஒட்டுக்கேட்க அனுமதி வழங்குவதாக மத்திய தொலை தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.
 
மாதத்துக்கு சுமார் 9,000 தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக்கேட்க அரசு அனுமதி வழங்குகிறதா என்று மக்களவையில் கேள்வி எழுப்பப்பட்டது. இந்தக் கேள்விக்கு தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலலித்தார். 
 
ரவிசங்கர் பிரசாத் அளித்த பதிலில் கூறியிருப்பதாவது:-
 
தொலைபேசி உரையாடல்களை ஒட்டுகேட்கலாம் என சட்டவிதிகள் உள்ளன. அதன் அடிப்படையில் நியாயமான காரணங்களுக்காக மாதத்துக்கு சராசரியாக 5000 தொலைபேசிகளை ஒட்டுகேட்க உள்துறை அமைச்சகம் அனுமதி வழங்குகிறது.
 
மத்திய, மாநில உள்துறை செயலர்கள், அவர்களால் அங்கீகரிக்கப்பட்ட உயர் அலுவலர்கள் இதற்கான அனுமதியை வழங்கமுடியும்.
 
அதேவேளையில், மத்திய அரசுத் துறைகளில் இணைசெயலர் பொறுப்புக்கு கீழ் உள்ள அதிகாரிகள் எவரும் இத்தகைய உத்தரவைப் பிறப்பிக்க முடியாது. இவ்வாறு ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்