ஏ.டி.எம்-ல் எப்போது பணம் எடுக்கலாம்? - புதிய அறிவிப்பு

புதன், 9 நவம்பர் 2016 (10:53 IST)
ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்து விட்டதால், ஏ.டி.எம்.மில் ரூ.100 நோட்டுகள் எடுக்க மக்கள் தவித்து வரும் வேளையில் புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.


 

 
ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகள் நேற்றிரவு முதல் செல்லாது என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று மற்றும் நாளை ஏடிஎம் மையங்கள் செயல்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  
 
இதனால் கையில் ரூ.500 மற்றும் ரூ.1000 ஓட்டுகள் வைத்துக்கொண்டு செலவழிக்க முடியாமல் தவித்த ஏராளமானோர், நேற்று இரவு முதலே ஏ.டி.எம் மையங்களில் குவிந்தனர். ஆனால், 12 மணிக்கு மேல் ஏ.டி.எம்.கள் செயல்படவில்லை.
 
இந்நிலையில், இந்தியாவில் உள்ள அனைத்து ஏ.டி.எம். மையங்களிலும் உள்ள ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகள் எடுக்கப்பட்டு, அதற்கு பதிலாக ரூ.100 நோட்டுகள் வைக்கப்படும் எனத் தெரிகிறது. அந்த பணி 2 நாட்களில் முடிந்து விடும். 
 
எனவே வருகிற 11ம் தேதி முதல் மக்கள் வழக்கம் போல் ஏ.டி.எம். மையங்களில் பணம் எடுத்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்