விபத்தில் இறந்த ஆட்டுக்காக போராடிய மக்கள் – 2.68 கோடி நஷ்டம் என புகார் கொடுத்த சுரங்க நிறுவனம் !

வியாழன், 3 அக்டோபர் 2019 (07:30 IST)
ஒடிசாவில் லாரியில் அடிபட்டு இறந்த தங்களது ஆட்டுக்காக அந்த பகுதி மக்கள் போராடியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒடிசாவில் மகாநதி எனும் நிலக்கரி உற்பத்தி சுரங்க நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தின் ஒரு சுரங்கமான தால்செர் நிலக்கரி சுரங்கத்தில் இருந்து நிலக்கரி ஏற்றி வந்த லாரி ஒன்று அப்பகுதியில் நடந்து சென்ற ஆட்டின் மேல் மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே ஆடு உயிரிழந்தது.

பலியான ஆட்டுக்காக 60,000 ரூபாய் இழப்பீடு வழங்கவேண்டுமெனக் கூறி அந்த ஆட்டின் உரிமையாளர் மற்றும் ஊர்மக்கள் சுரங்க நிறுவனத்தின் லாரிகளை மறித்துப் போராடினர். கிட்டத்தட்ட மூன்றரை மணிநேரம் நடந்த அந்த போராட்டம் பேச்சுவார்த்தைக்குப் பின் கைவிடப்பட்டது.

இதையடுத்து மகாநதி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் போராட்டத்தால் லாரிகள் போக்குவரத்து தடைபட்டுள்ளது. இதனால் ஏற்பட்ட நிலக்கரி போக்குவரத்துத் தடையால் 2.68 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது எனக் கூறப்பட்டுள்ளது. மேலும் அனுமதி இன்றி மக்கள் போராடியதாக அப்பகுதி மக்கள் மேல் மேல் நடவடிக்கை எடுக்கக்கோரி காவல் நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்