உத்தரப்பிரதேச மாநிலத்தில் லக்கிம்பூர் கெரி மாவட்டத்தில் துத்வா புலிகள் சரணாலயம். அங்கு பல வகையான காட்டு மிருகங்கள் உள்ளன. சமீபத்தில் அங்கு பெய்த பெருமழையால் முதலை ஒன்று தப்பித்து அருகில் உள்ள கிராமத்துக்குள் நுழைந்துவிட்டது. ஊருக்குள் முதலையைப் பார்த்த மக்கள் வனத்துறைக்குத் தகவல் தெரிவித்துளனர். ஆனால் அவர்கள் வருவதற்குள் கிராம மக்கள் தாங்களாகவே முதலையை பிடித்துள்ளனர்.
அங்கு வந்து வனத்துறையினரிடம் முதலையை தாங்கள் கஷ்டப்பட்டு பிடித்ததால் தங்களுக்கு 50,000 ரூபாய் பணம் தந்ததால்தான் கொடுப்போம் என சொல்லி பேரம் பேசியுள்ளனர். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அதிகாரிகள் ஒரு கட்டத்தில் முதலையை ஒப்படைக்கவில்லை என்றால் சடடப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என சொன்ன பிறகே முதலையை ஒப்படைத்துள்ளனர்.