ஆம்புலன்ஸில் ஆக்சிஜன் இல்லாமல் நோயாளி மரணம்

வெள்ளி, 14 அக்டோபர் 2016 (13:54 IST)
உத்திரப்பிரதேசம் மாநிலத்தில் ஆம்புலன்ஸ் வேனில் ஆக்சிஜன் இல்லாததால் நோயாளி மரணம் அடைந்த சம்பவம் தொடர்பாக உரிய விளக்கம் அளிக்குமாறு மாநில அரசுக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.


 

 
உத்திரப்பிரதேசம் மாநிலம் பிஜ்னோர் மாவட்டம், சாந்த்பூர் பகுதியை சேர்ந்த முகமது அஸ்லம்(55) என்பவர் ஆஸ்துமா நோயாளி. இவர் மூச்சுத்திணறால் பாதிக்கப்பட்டதால், அவரது உறவினர்கள் ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். 
 
ஆம்புலன்ஸில் செயற்கை சுவாசம் அளிக்க தேவையான ஆக்சிஜன் இல்லாததால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலே உயிரிழந்தார்.
 
இந்த செய்தி கடந்த திங்கட்கிழமை ஊடகங்களில் வெளியாகின. அதைத்தொடர்ந்து தேசிய மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து வழக்குபதிவு செய்துள்ளது. அதோடு அவரது உயிரிழப்பு தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு மாநில அரசு சுகாதாரத்துறை முதன்மை செயலாளருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்