சிறார்கள் வாகனம் ஓட்டினால் பெற்றோர்கள் கைது: மத்திய அரசு அறிவிப்பு

வியாழன், 21 ஏப்ரல் 2016 (18:38 IST)
இந்தியாவில் 18 வயதுக்கு உட்பட்டவர்களால் சாலை விபத்துகளின் எண்ணிக்கை அதிகமாவதால் பெற்றோர்கள் கைது செய்யப்படுவார்கள் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.


 
 
இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் நடக்கும் சாலை விபத்துகளால் 2 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்படுவதாக புள்ளி விவரம் தெரிவிக்கிறது. இந்த இழப்பு தொகை ராணுவ பட்ஜெட்டில் சற்று குறைவான தொகையாக கருதப்படுகிறது.
 
டெல்லியில் 12-ம் வகுப்பு மாணவன் ஒருவன் பென்ஸ் காரை ஓட்டிச் சென்று ஏற்படுத்திய விபத்து, மத்திய அரசை உடனடியாக முடிவு எடுக்க வைத்துள்ளது.
 
சிறார்கள் வாகனம் ஓட்டுவதை தடுக்க மத்திய அரசு மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம் கொண்டு வர முடிவு செய்துள்ளது. இதுகுறித்து மத்திய அரசு, மாநில அரசுடன் ஆலோசனை செய்து வருகிறது. மேலும், பெற்றோர்கள் மீது தகுந்த சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்தது.
 
இதை தொடர்ந்து பெங்களூர் மாநில அரசு சிறார்கள் வாகனம் ஓட்டிப் பிடிபட்டால் பெற்றோர்கள் கைது செய்யப்படுவதுடன், அவர்களின் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

வெப்துனியாவைப் படிக்கவும்