20 லட்ச ரூபாய்க்கு மேல் பணவர்த்தனை செய்வோருக்கு புதிய நிபந்தனை!

வியாழன், 12 மே 2022 (12:34 IST)
வங்கி கணக்கில் ஒரு வருடத்தில் 20 லட்சம் ரூபாய் அல்லது அதற்கு மேல் பண பரிவர்த்தனை செய்தால் பான் எண் அல்லது ஆதார் எண்ணை குறிப்பிடுவது கட்டாயம் எனவும், அதுமட்டுமின்றி வங்கிகளில் நடப்பு கணக்கு தொடங்குவதற்கும் பான் எண் கட்டாயம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
 
இந்த விதிகள் மே 26ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் எனவும், இந்த விதிகள் வங்கி கணக்குகளுக்கு மட்டுமல்லாது அஞ்சலகங்கள் மற்றும் கூட்டுறவுச் சங்கங்களுக்கும் பொருந்தும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது
 
அதே போல் தினமும் 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் டெபாசிட் செய்தால் பான் எண் கட்டாயம் என்றும், பான் எண் இல்லாமல் பெரிய தொகையை பரிவர்த்தனை செய்ய முடியாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்