இந்தியாவில் உள்ள ஒவ்வாரு மாநில காவல்துறைக்கும் தனித்தனியாக இணையதளம் செயல்பட்டு வருகிறது. இந்த இணைய தளத்தில் காவல்துறை அதிகாரிகள் பதவிகள், தொலைபேசி எண்கள், செயல்பாடுகள், தேடப்படும் குற்றவாளிகள் குறித்த தகவல்கள் போன்ற பல்வேறு முக்கியத் தகவல்கள் இடம் பெறும்.
இந்த நிலையில், அதன் அதிகாரப்பூர்வ இணையதளமான http://www.ksp.gov.in திடீரென முடக்கப்பட்டது. இணையதளத்தின் முன்பக்கம் எல்லாம் அழிக்கப்பட்டதோடு, பாகிஸ்தான் கொடியை அப்டேட் செய்து, பறக்கவிட்டுள்ளனர். அத்துடன், உங்கள் பாதுகாப்புக்கு இது அவமானம் என்று எழுதப்பட்டு இருந்தது.